மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பிளஸ்2 தேர்வில் முறைகேடுகளை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுப்பது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் வருகிற 23-ம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:45 am

எஸ். பாண்டியன்

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுப்பது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் வருகிற 23-ம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.

பிளஸ்2 தேர்வு வருகிற மார்ச் 5-ம் தேதி முதல், தொடர்ந்து 31-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. அதேபோல், 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 19-ம் தேதி முதல், தொடர்ந்து ஏப்.10 வரையிலும் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடந்து வருகிறது. அதில், விடைத்தாள் முகப்பு சீட்டுக்கள் தைக்கும் பணி அந்தந்த தேர்வு மையங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகள் மற்றும் முறைகேடுகளை தடுப்பது தொடர்பாக வருகிற 23-ம் தேதி ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் முன்னிலையிலும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், வருவாய்த்துறை, மின்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.

இதில், தேர்வு மையங்களில் இடை நிறுத்தம் இல்லாமல் மின்விநியோகம்,  போக்குவரத்து வசதி, தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள் வைப்பறைகளில் போலீஸார் பாதுகாப்பு, தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுதுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து முடிவு செய்யப்பட இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.