சிறுமிக்கு திருமணம் நடத்த கட்டாயம் : பெற்றோர் மீது வட்டாட்சியரிடம் புகார்
ஆம்பூர் அருகே சிறுமிக்கு திருமணம் நடத்த கட்டாயப்படுத்தப்பட்டதாக அச்சிறுமி தன்னுடைய பெற்றோர்கள் மீது ஆம்பூர் வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை


ஆம்பூர் அருகே சிறுமிக்கு திருமணம் நடத்த கட்டாயப்படுத்தப்பட்டதாக அச்சிறுமி தன்னுடைய பெற்றோர்கள் மீது ஆம்பூர் வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தார்.
ஆம்பூர் அருகே மோதகப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (40). இவரது மனைவி கவிதா (35). இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவருடைய மகள் காவ்யா (16) கரும்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்ஒன் படித்து வந்துள்ளார். அவருக்கு சென்னை பெரம்பூரை சேர்ந்த சக்திவேல் (40) என்பவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்துள்ளது. தனக்கு திருமணம் வேண்டாம், தான் தொடர்ந்து படிக்க வேண்டுமென காவ்யா கூறியுள்ளார்.
ஆனால் அவரது பெற்றோர்கள் அவரை கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால் அவர் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். இதுகுறித்து புகார் செய்தார். வட்டாட்சியர் சரஸ்வதி அவரிடம் விசாரணை நடத்தினார். அவர் சமூக நலத்துறை மூலம் வேலூரில் உள்ள காப்பாகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக வட்டாட்சியர் அலுவலகத்தினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...