/

விருதுநகரில் 4 சிறுமிகளின் திருமணம் தடுத்த நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் அருகே திருச்சுழி பகுதியில் நடைபெற இருந்த 4 சிறுமிகளின் திருமணங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:16 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே திருச்சுழி பகுதியில் நடைபெற இருந்த 4 சிறுமிகளின் திருமணங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியில் குறிப்பிட்ட வயதை அடையாத சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் வே.ராஜாராமனுக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட சமூக நலத்துறை, ஆள்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் திருச்சுழி அருகே தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டி மகள் மல்லிகா(17)-கமுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வீரபூசன் மகள் ஜெயலட்சுமி(17)-வீரக்குமார், திருச்சுழியைச் சேர்ந்த வீரநாகுவின் மகள் பாண்டீஸ்வரி(14)-அதே பகுதியைச் சேர்ந்த கார்மேகம் ஆகியோருக்கு வருகிற மே.6ம் தேதி பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

அதேபோல், திருச்சுழி மேலக்கண்டமங்கலம் சக்திவேல் மகள் மீனாட்சி(17)-அதே பகுதியைச் சேர்ந்த சோலைராஜ் என்பவருக்கும் மே.1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் கிராமத்திற்கு நேரில் சென்று  இருவீட்டாரையும் அழைத்து குறிப்பிட்ட வயதை அடையாத நிலையில் திருமணம் நடத்துவது விதிமுறைப்படி குற்றம் என தெரிவித்தனர். அதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பிட்ட வயதிற்கு பின் திருமமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் எழுதி வாங்கிக் கொண்டனர். பின்னர் சிறுமிகளை பாண்டியன் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.