சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மதுரை அருகே மின்சாரம் தாக்கியதில் புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் சாவு

மதுரை அருகே மின்சாரம் தாக்கியதில் புதுமாப்பிள்ளை உள்ளிட்ட 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:15 am

ஜெயப்பாண்டி

மதுரை அருகே மின்சாரம் தாக்கியதில் புதுமாப்பிள்ளை உள்ளிட்ட 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் பூதகுடி அருகே உள்ளது லட்சுமிபுரம். இவ்வூரைச் சேர்ந்தவர் அய்யாவு (72). ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் மகன் பெத்துராஜ் என்ற குமார் (22). இருவரும் கூடல்புதூர் ஆனந்த்நகரில் உள்ள பந்தல் அமைக்கும் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.கூடல்புதூர் விரிவாக்கப்பகுதியில் உள்ள வேல்நகரில் கருப்புசாமி என்பவரது இல்லத்தில் வளைகாப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்தது. அதற்காக வீட்டு மாடியில் சாமியானா பந்தலை அய்யாவு, குமார் ஆகியோர் அமைத்துள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்த நிலையில் திங்கள்கிழமை பகலில் பந்தலைக் கழற்றும் பணியில் இருவரும் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக பந்தலிóன் இரும்புக் கம்பி அருகேயிருந்த மின்கம்பியில் உரசியுள்ளது. இதில் கம்பியைப் பிடித்திருந்த அய்யாவு, குமார் இருவர் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த கூடல்புதூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மின்சாரத்தை தடை செய்து இருவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்தார். அவரது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதை அறிந்து அவரது வீட்டாரும், காதல் மனைவியும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.