செங்கல்பட்டு நகராட்சி கவுன்சிலர் இடைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீது வரும் (செப்டம்பர்) 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு, பெரியநத்தம் கிராமத்தை சேர்ந்த கே.தணிகைவேல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: செங்கல்பட்டு நகராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இந்தத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக கடந்த 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தேன். வேட்பு மனு மீதான பரிசீலனை கடந்த 5-ஆம் தேதி தேர்தல் அதிகாரியான செங்கப்பட்டு நகராட்சி ஆணையர் தலைமையில் நடந்தது.கூட்டம் நடந்து முடிந்த பிற்பகல் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆனால், அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது, வேட்புமனுவில் வருமான வரி செலுத்தப்பட்டது குறித்த விவரங்கள் குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.வருமான வரி செலுத்தும் அளவு எனக்கு வருமானம் இல்லாததால், நான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. எனவே, எனது வேட்பு மனுவை நிராகரித்து தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.மேலும், இறுதி வேட்பாளர் பட்டியலையும், இடைத்தேர்தல் அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு திங்கள்கிழமை (செப்.15) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதி, செங்கல்பட்டு நகராட்சி கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் குறித்து செப்டம்பர் (புதன்) 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

