டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மின்விளக்கு கோபுரத்தில் ஏறி இளைஞர் மிரட்டல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் பிச்சைமாரி (30). இவர் மலையேற்ற வீரர் எனக் கூறப்படுகிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உயர்கோபுர

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:02 am

ஜெயப்பாண்டி

மின்விளக்கு கோபுரத்தில் ஏறி மதுரையில் இளைஞர் வியாழக்கிழமை காலை தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் பிச்சைமாரி (30). இவர் மலையேற்ற வீரர் எனக் கூறப்படுகிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். இதையடுத்து தல்லாகுளம் போலீஸார் விரைந்து வந்து இளைஞரை கீழே இறங்கிவருமாறு கூறினர்.

நீண்டநேரத்துக்குப் பின் கீழே இறங்கிய பிச்சைமாரியிடம் விசாரித்தபோது, மலையேற்றத்தில் சிறந்து விளங்கும் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறினார். இதையடுத்து அவரை தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.