கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தம் முன்புறம் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் வள்ளியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:01 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றம் செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செவ்வாய்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தம் முன்புறம் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் வள்ளியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். இதில், ஆத்துப்பாலம் பகுதியில் வெளியூர்களுக்கு பேருந்து ஏறிச் செல்லும் வகையில் நிறுத்தம் இருக்கிறது. அதனால் எந்த நேரமும் பயணிகள் அதிகம் பேர் பேருந்து ஏறிச் செல்வதற்காக நிற்கின்றனர். அப்போது, குடிகாரர்களின் தொல்லையால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இதுபோன்றவைகளை தடுக்கும் வகையில் இக்கடையை உடனே மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். அதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து அகற்றம் செய்வதாக உறுதியளித்தனர். பின்னர் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.