சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளைஞரிடம் ரூ.95 ஆயிரம் மோசடி
விருதுநகர் அருகே பட்டதாரி இளைஞருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புத் தருவதாக கூறி ரூ.95 ஆயிரத்தை மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பணியாளர் மீது ஆமத்தூர்


விருதுநகர் அருகே பட்டதாரி இளைஞருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புத் தருவதாக கூறி ரூ.95 ஆயிரத்தை மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பணியாளர் மீது ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே மேலஆமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன்(25). இவர் வேதியியல் துறை முதுகலை பட்டதாரி ஆவார். இந்நிலையில், சென்னையில் இருந்து இவரது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்ததாம். அதில், கிசோன் காமராஜ் பேசுவதாகவும் பிரசித்தி பெற்ற தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு, திரைப்படத்துறையில் நன்கு அறிமுகம் உள்ளதாகவும் கூறி நடிப்பதற்கு வாய்ப்பு பெற்று தருவதாக உறுதியளித்தாராம். இதைத் தொடர்ந்து நடிப்பதற்கு பணம் தேவையென அந்த பிரமுகர் கேட்டதைத் தொடர்ந்து கடந்த 2012-டிச-15ம் தேதி விருதுநகர் கனரா வங்கி மூலம் ரூ.88 ஆயிரமும், அதன் பின்னர் மீண்டும் எஸ்பிஐ வங்கியின் மூலம் ரூ.7 ஆயிரமும் அனுப்பினாராம். குறிப்பிட்ட நாள்கள் கடந்த பின்னும் இதுவரையில் வாய்ப்பு வாங்கித் தரமால் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதையடுத்து, தொடர்பு கொண்டு வாய்ப்பு தாருங்கள், இல்லையென்றால் பணத்தை திருப்பித் தரும்படி மாரீஸ்வரன் கேட்டாராம்.
அதையடுத்து சென்னை வடபழனிக்கு புறப்பட்டு வரும் படி கூறியதை தொடர்ந்து உடனே புறப்பட்டுச் சென்றுள்ளார். குறிப்பிட்ட இடத்தில் நிற்பதாக கூறி தொடர்பு கொண்டதற்கு, இங்கு எதற்கு வந்தாய் எனக் கூறி உடனே திரும்ப செல்லும் படியும் கூறி மிரட்டினாராம். பின் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது கைபேசியின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மாரீஸ்வரன் விருதுநகர் ஜே.எம்.நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மனுவை விசாரித்த நீதிபதி உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையம் விசாரணை செய்ய உத்தரவிட்டாராம்.
இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் திரைப்பட பிரமுகர் கிசோன் காமராஜ் மீது வழக்கு பதிந்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...