விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹாசன்குமார் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் மற்றும் தொழிலதிபருமான வி.வி.எஸ்.யோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், மதுவில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். இதற்காக மதுக்கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் முக்கிய பிரமுகர்களான டி.கே.எஸ்.சங்கரபாண்டியன, நகர நல அமைப்புச் செயலாளர் டாக்டர் ரத்தினவேல், தொழிலதிபர்கள் இதயம் முத்து, கே.எம்.ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.