விருதுநகர் அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே என்.முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி சித்ராதேவி(23). இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக மனம் வேதனை அடைந்து தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே என்.முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி சித்ராதேவி(23). இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதிலிருந்தே வருத்தத்துடனும், மன வேதனையுடனும் இருந்தாராம். இதனால் மன நிம்மதியை இழந்த சித்ராதேவி கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டிற்குள் சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து படுகாயம் அடைந்தார்.
பின்னர் உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவரது கணவர் செந்தில்குமார் நரிக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...