ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான காரணிகளில் மிக முக்கியமானது பெண் கல்வி தான். பெண்கள் கல்வி கற்ற சமுதாயம் தான் முன்னேறிய சமுதாயமாக கருத முடியும். இந்த அளவீட்டின்படி பார்த்தால் கடலூர் மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக பார்க்க முடியாது. இந்த நிலையை மாற்ற அனைத்துத்தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-12ம் ஆண்டிலிருந்து நடப்பாண்டு செப்டம்பர் வரையில் 95 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில், கடலூர் வட்டத்தில் 18, பண்ருட்டி 13, குறிஞ்சிப்பாடி 10, சிதம்பரம் 13, விருத்தாச்சலம் 22, திட்டக்குடி 8, வேப்பூர் 5, காட்டுமன்னார் கோயில் 6 திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது.