டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தமிழகத்தின் தற்போதைய வளர்ச்சிக்கு காமராஜர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களே காரணம்: பி.எஸ். ஞானதேசிகன்

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைசர் ஜி.கே. வாசன் புதிதாக துவங்குவதாக அறிவித்துள்ள கட்சி கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:27 am

ஜெயப்பாண்டி

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைசர் ஜி.கே. வாசன் புதிதாக துவங்குவதாக அறிவித்துள்ள கட்சி கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது.

இந்த திருச்சி மாநாட்டுக்கு ஆதரவாளர்களை திரட்டும் வகையில் ஜி.கே வாசனின் ஆதரவாளரும் முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பி.எஸ் ஞானதேசிகன் இன்று மதுரையில் ஜி.கே. வாசனின் புதிய கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

தமிழகத்தின் தற்போதைய வளர்ச்சிக்கு பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களே காரணம். காமராஜர் ஆட்சி என்றால் நேர்மை, வாய்மை, தூய்மை, சேவை என்பதாகும். இவை 4ம் கொண்ட காமராஜரின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்போம் என்று கூறினார்.

காமராஜர் பெயரை கூறாமல் எந்த அரசியல்வாதியும் இருக்க முடியாது. காமராஜரின் திட்டங்களான முதியோர் ஓய்வூதிய திட்டம், மதிய உணவு திட்டங்களே கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டது.

காமராஜர் மூப்பனார். படங்களை தமிழக காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில் இடம்பெற செய்ய வேண்டும் என்று ஜி.கே. வாசன் அழுத்தமான உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். அது உண்மை என நிரூபிக்கும் வகையிலேயே காங்கிரஸாரின் இன்றைய செயல்பாடுகள் உள்ளன என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.