ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

12 குளங்களுக்கான மீன் குத்தகை: உதவி இயக்குநர் அலுவலகம் முற்றுகை

மீன் குத்தகை எடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி மனுக்களை பெறுவதில் ஏற்பட்ட குளறுபடியால்,

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:24 am

ஆ. நங்கையார் மணி

மீன் குத்தகை எடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி மனுக்களை பெறுவதில் ஏற்பட்ட குளறுபடியால், மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை மனு அளிக்க வந்தவர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்தில் 8, ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 1, நிலக்கோட்டை ஒன்றியத்தில் 3 என மொத்தம் 12 குளங்களில் மீன் குத்தகை விடுவதற்கான ஏல அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

திண்டுக்கல் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், நவ.17(திங்கள்கிழமை) மாலை 5 மணி வரை ஒப்பந்தப்புள்ளி மனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடைசி நாளான திங்கள்கிழமை, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளிக்கான மனுக்களை வழங்குவதற்காக ஏராளமானோர் திரண்டனர். ஆனால் அலுவலக கண்காணிப்பாளர், காலை 10 மணிக்கு முன்னதாகவே ஒப்பந்தப்புள்ளி மனுக்கள் செலுத்த வேண்டிய பெட்டியை, உதவி இயக்குநரின் அறைக்குள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

இதனால் ஒப்பந்தப்புள்ளி தாக்கல் செய்ய வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்காணிப்பாளர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் தெரிவித்த அவர்கள், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனை அடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மீன்வளத்துறை உதவி இயக்குநர் வரும் வரை அமைதிகாக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

பிற்பகல் 1 மணிக்கு மேல் வந்த உதவி இயக்குநர் கோ.வெங்கடசாமியிடம், மனு அளிக்க வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, மாலை 5 மணி வரை யார் வேண்டுமானாலும் ஒப்பந்தப்புள்ளி மனுக்களை வழங்கலாம் என உதவி இயக்குநர் தெரிவித்தார். அதன்பின்னர், தனிஅறையில் இருந்த பெட்டியை வெளியில் எடுத்து வந்து, மனுக்கள் பெறப்பட்டன. இதனால், சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.