ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ரூ.1.21 கோடி வாடகை பாக்கி: 22 பஸ் நிலைய கடைகளுக்கு சீல்

கடலூர் நகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்துள்ள 22 பஸ் நிலைய கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

Updated On :12 நவம்பர் 2014, 1:04 pm

கடலூர் நகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்துள்ள 22 பஸ் நிலைய கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

கடலூர் நகராட்சி நிர்வாக ஆணையராக முருகேசன் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நகராட்சி வருவாயைக் கருத்தில் கொண்டு, நகராட்சிக்கு வரவேண்டிய வாடகை மற்றும் வரிகளை வசூல் செய்யும் பணியைத் துரிதப்படுத்தியுள்ளார். அதன்படி முதற்கட்டமாக வரி பாக்கிகளை வசூல் செய்ய தனிக் குழு அமைத்து அக்குழுவிற்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடலூர் பஸ் நிலையத்தில் 81 கடைகள் உள்ளன. இவற்றில் 24 கடைகள் வாடகை மற்றும் இடப் பிரச்சனைத் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எஞ்சிய கடைகளில் பெரும்பாலான கடைகளை வாடகைக்கு நடத்துவோர் கடந்த 4 ஆண்டுகளாக நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய வாடகை மற்றும் வரிகளை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் வாடகை பாக்கியாக ரூ.1 கோடியே 21 லட்சம் நிலுவையில் தொடர்ந்தது.

இந்நிலையில் ஆணையர் முருகேசன், முதற்கட்டமாக பஸ் நிலையக் கடை வாடகைதாரர்களுக்கு வாடகைப் பாக்கியை செலுத்தக் கோரி கடிதம் மூலம் நினைவூட்டல் கடிதம் வழங்கினார். இருப்பினும் வாடகை செலுத்தப்படவில்லை. இதையடுத்து இருமுறை எச்சரிக்கை நோட்டீஸþம் வழங்கப்பட்டது.அந்த நோட்டீஸில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சில வாடகைதாரர்கள் உடனடியாக வாடகைப் பாக்கியை செலுத்தினர். இருப்பினும் பலர் செலுத்தாத நிலையில் நகராட்சி நிர்வாகம் அதிரடியாக நேற்று காலை வாடகை செலுத்தாமல் அதிகப்படியான நிலுவை வைத்துள்ள 22 கடைகளுக்கு பூட்டுப் போட்டு சீல் வைத்தனர். இதனால் வாடகைதாரர்களுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் பாதுகாப்பக்காக சென்றிருந்த போலீஸôர் வாடகைதாரர்களை வெளியேற்றினனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு நகராட்சி நிர்வாகம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை கடலூர் நகர மக்கள் வரவேற்றுள்ளனர். கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் தொடரும் முறைகேட்டையும், நகராட்சி நிர்வாகம் தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.