சேதுசமுத்திர திட்டம் தடைபட்டிருப்பதற்கு முக்கிய காரணம் பாரதிய ஜனதா கட்சி தான் என ஆம்பூரில் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
ஆம்பூரில் உள்ள தன்னுடைய ஆதரவாளரின் இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது, இலங்கை தமிழர் பிரச்சனையிலும், தமிழக மீனவர் பிரச்சனையிலும் இலங்கை அரசு ஈவு இரக்கமின்றி நடக்கின்றது இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்கு போட்டு ஈவு இரக்கமில்லாமல் மரண தண்டனை விதித்துள்ளது. தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் போர் நடந்து முடிந்த பிறகு அங்குள்ள தமிழர்கள் அவர்களுடைய பகுதிகளில் மறு குடியமர்வு செய்வதற்காக அப்போதைய மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்தது. ஆனால் அவர்கள் இன்னும் மறு குடியமர்த்தப்படவில்லை. அவர்களை மறு குடியமர்த்த இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதுசமுத்திர திட்டம் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டம், முக்கிய திட்டமும் ஆகும். மத்தியில் ஆளும் பாஜக அரசு சேதுசமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈவிகேஎஸ். இளங்கோவன், திமுக தலைவர் மு. கருணாநிதி ஆகியோர் சந்திப்பு குறிóத்தும், காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் குறித்தும் எதுவும் கூறுவதற்கு இல்லை. தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார கட்டண உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விலை உயர்வு கண்டத்திற்கு உரியது. அதனை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


