நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்

மக்களவை தேர்தலில் போட்டியிடுகிற ஒவ்வொரு வேட்பாளரும் தலா ரூ.70 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதற்கென தனியாக வங்கி கணக்கு தொடங்கி, அதன் மூலம் தேர்தல்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:21 am

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு, செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் போட்டியிடுகிற ஒவ்வொரு வேட்பாளரும் தலா ரூ.70 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதற்கென தனியாக வங்கி கணக்கு தொடங்கி, அதன் மூலம் தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.வேட்பு மனுதாக்கல் செய்த நாளில் இருந்து, ஓட்டுப்பதிவு நிறைவடையும் நாள் வரையிலான செலவுகளை கண்காணிக்க மக்களவை தொகுதி வாரியாக, தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களிடம் அவ்வப்போது செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடலூர் மக்களவை தொகுதியை பொறுத்தவரையில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் உள்பட 17 பேர் போட்டியிட்டனர். ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டது.கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், கடந்த மாதம் 20 ம் தேதி வரை தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவொரு வேட்பாளரும் செலவு கணக்குகளை முழுமையாக தாக்கல் செய்யவில்லை.

இதற்கிடையே செலவு கணக்குகளை முழுமையாக தாக்கல் செய்ய, ஜூன் 15 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுத்துள்ளது. அன்றைய தினம், கடலூர் மக்களவை தொகுதிக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் 2 பேர் வருகின்றனர். வேட்பாளர்களின் செலவு கணக்குகளை, அவர்கள் ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பார்கள். இதில் ஏதேனும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தால் அந்த வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.இந்த நிலையில் ஜூன் 15 ஆம் தேதிக்கு முன்னதாக தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் பிரிவு அலுவலகத்தில் இருந்து, 17 வேட்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் மாதம் முதல் வாரத்தில், அனைத்து வேட்பாளர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்தில் செலவு கணக்குகளை முழுமையாக தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட உள்ளது தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.