இளைஞர் தலை துண்டித்து கொலை: 3 பேர் கைது
வடலூர் அருகே இளைஞர் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீஸார் சனிக்கிழமை


வடலூர் அருகே இளைஞர் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மருவாய் பரவனாற்றங்கரையில் கடந்த 18ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சேத்தியாதோப்பு அருகே சோழதரத்தில் எரிந்த நிலையில் ஒரு தலை கண்டுபிடிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட நபர் யார் என தெரியாத நிலையில் அதனை கண்டு பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜயங்கொண்டம் பகுதியில் விசாரணை நடத்தியபோது கொலை செய்யப்பட்ட இளைஞர், அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளத்தை சேர்ந்த சந்திரசேகரன் மகன் சரத்குமார்(25) என தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, வடலூர் போலீஸôர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கேரளாவில் சரத்குமாரின் தந்தை சந்திரசேகரனுடன் ரவிச்சந்திரன் என்பவர் வேலை செய்து வந்ததும். அங்கு அவர் மர்மமான முறையில் இறந்ததுவிட்டார். ரவிச்சந்திரனின் சாவுக்கு சந்திரசேகரன் காரணம் என அவரது உறவினர்கள் கருதினர். இதனால், அவரையோ அவரது மகன் சரத்குமாரையோ பழிக்கு பழியாக கொலை செய்ய ரவிச்சந்திரனின் சகோதரர் சாமிதுரை முடிவு செய்தார்.
இதனையடுத்து அவரது நண்பர்களான நாராயணசாமி, அஷ்ரப்அலி ஆகியோருடன் இணைந்து திட்டமிட்டு இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. தனிப்படை போலீஸார் இந்த 3 பேரையும் ஜயங்கொண்டம் பகுதியில் பிடித்து விசாரணை செய்தனர். இந்நிலையில் 3 பேரையும் கைது செய்து கடலூர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...