மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழகத்தில் 40 மக்களவை தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்: வைகோ

பா.ஜ.க தேசிய ஜனநாயக கூட்டணியின் விருதுநகர் மக்களவை தொகுதியின் வேட்பாளர் வைகோ போட்டியிடுகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்களை நேரில் சந்தித்து தனக்கு வாக்கு கேட்டு தீவிர

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:48 am

எஸ். பாண்டியன்

தமிழகத்தில் 40 மக்களவை தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

பா.ஜ.க தேசிய ஜனநாயக கூட்டணியின் விருதுநகர் மக்களவை தொகுதியின் வேட்பாளர் வைகோ போட்டியிடுகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்களை நேரில் சந்தித்து தனக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் திங்கள்கிழமை பிரசாரம் செய்ய வந்த அவருக்கு அவருக்கு மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பளித்தனர். அதன் பின் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தனது ஆதரவாளர்களுடன் நகராட்சி சாலை, பஜார் பகுதி, தெப்பக்குளம், தேசபந்து மைதானம், பழைய பேருந்து நிலையம் மற்றும் காமராஜர் மணிமண்டபம் வரையில் நடைபயணமாக சென்று பொதுமக்களையும், வியாபாரிகளையும் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் என்னை, உங்கள் பிரதிநிதியாக மக்களவைக்கு அனுப்பி வைக்க ஆதரவு அளிக்குமாறு கூறி பிரசாரம் செய்தார்.

அதில், விருதுநகர் மாரியம்மன் கோயில் எதிரில் தேசபந்து மைதானத்தில் பிரசாரம் செய்து வைகோ பேசுகையில், இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவார்கள். அதேபோல், நாடு முழுவதும் நரேந்திரமோடி அலை வீசி வருகிறது. அதனால், 300 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நரேந்திரமோடி ஆட்சி அமைப்பார். அகிலந்திய அளவில் நதி நீர் ஆதரங்களை ஒருங்கிணைப்பது தொடர்பான பிரச்னை, சிங்கள கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் விவகாரம், ஈழத்தமிழர் பிரச்னை உள்ளிட்டவைகளுக்கு தீர்வு காணப்படும். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு நுழைவதை தடுக்கவும், உணவு பாதுகாப்பு திட்டத்தை மாற்றியமைக்கவும் மோடி பிரதமராக வரவேண்டும்.

இத்தொகுதியில் நான் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளேன். மஞ்சள்காமலை தடுப்பு முகாம் நடத்தி 67 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசியும், 27 மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாமையும் நடத்தியுள்ளேன். விருதுநகர் காமராஜர் மணிமண்டபம் அமைய அனுமதி பெற்று தந்ததோடு, டி.எம்.பி வங்கியையும் மீட்டு கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளளேன். எங்கெல்லாம் தமிழர்கள் துன்ப்படுகிறார்களோ அங்கெல்லாம் சென்று அவர்களின் பாதுகாப்பிற்காக போராட்டம் நடத்தியுள்ளதாகவும் வைகோ தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மதிமுகவின் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.எஸ்.சண்முகசுந்தரம், பா.ஜ.க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி மற்றும் தேமுதிக மாவட்ட செயலாளர் வைரமுனி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.