மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

40 தொகுதியிலும் ரூ.1200 கோடி செலவு செய்ய அதிமுக திட்டம்: மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் தகவல்

தமிழகத்தில் உள்ள 40 மக்களவை தொகுதியிலும் அதிமுகவினர் ரூ.1200 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் தகவல்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:48 am

எஸ். பாண்டியன்

தமிழகத்தில் உள்ள 40 மக்களவை தொகுதியிலும் அதிமுகவினர் ரூ.1200 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் தகவல் தெரிவித்தார்.

விருதுநகர் தனியார் அரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சாமுவேல்ராஜ் அறிமுக கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சாமுவேல்ராஜை கட்சியினருக்கு அறிமுகம் செய்து மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அல்லாத மாற்று அரசு அமைய வேண்டும்.

பொதுமக்களுக்காக நாம் எவ்வளவோ போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதை வைத்து ஒவ்வொரு வீடு, வீடாக சென்று நிர்வாகிகள் வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட வேண்டும். திமுக தலைவர் கருணாநிதி கம்யூனிஸ்ட் வந்தால் வரவேற்பதாக குறிப்பிட்டிருந்தார். நாம் கூட்டணியில் சேர்ந்திருந்தால் பிரகாஷ்காரத், பரதன் ஆகிய தலைவர்களை பேச அழைத்திருப்பார். அதைவைத்து நாங்கள் 2ஜியில் ஊழல் செய்திருந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவுடன் கூட்டணி சேர்ந்திருப்பார்களா என்ற கேள்வியை கருணாநிதி கட்டாயம் எழுப்பியிருப்பார். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு ஆதரவு தெரிவித்த திமுக, தேர்தல் அறிக்கையில் எதிர்ப்போம் என குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல், பஸ் கட்டணம், மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பொதுமக்கள் பிரச்னையில் இருந்து அதிமுக தப்பிக்கவே முடியாது. இந்நிலையில் அதிமுகவினர் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.30 கோடி வீதமும், திமுகவினர் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி வீதமும் செலவு செய்யவுள்ளனர். இதேபோல், காங்கிரஸ் மற்றும் தேமுதிகவும் திட்டமிட்டுள்ளனர். பா.ஜ.கவில் யார் வேட்பாளர்கள் என்பதையும், எங்கு போட்டியிடுகிறார் என்பதையும் ஆர்.ஆர்.எஸ் தான் முடிவு செய்கிறது. இருந்த போதிலும் மத்தியில் காங், பா.ஜ.க வநதாலும் 6 மாதத்திற்கு மேல் ஆட்சி நடத்த முடியாத நிலையே ஏற்படும்.

தற்போது, தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத 90 லட்சம் இளைஞர்களில், 3 லட்சம் பேர் வரையில் பொறியியல் பட்டதாரிகள் உள்ளனர். இதுபோன்ற பிரச்னைகளை கூறி இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும் பிரசாரம் செய்ய நிர்வாகிகளை மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் கேட்டுக் கொண்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.