விருதுநகர் அருகே 4 வழிச்சாலையோரம் உள்ள தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் வழக்குரைஞர் உள்ளிட்ட 3 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் வழக்குரைஞர் ராஜா, ரியல் எஸ்டேட் புரோக்கர் பேச்சிமுத்து, பேச்சிராஜ், உறவினர்களான சகுந்தலா, அவரது கணவர் மைக்கேல்ராஜ் ஆகியோர் சொந்த வேலையின் காரணமாக கோவைக்கு வியாழக்கிழமை சென்றார்களாம். வாகனத்தை ராஜா ஓட்டினாராம். இந்நிலையில் அங்கு பணியை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்டு திருநெல்வேலி நோக்கி சென்றனர். அப்போது, விருதுநகர் சூலக்கரை தனியார் மருத்துவமனை அருகே வரும் போது 4 வழி்சசாலையோர இரும்பு தடுப்பில் கார் மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராஜாவும், பேச்சிமுத்துவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், பேச்சிராஜ், சகுந்தலா மற்றும் அந்தோனிடேவிட் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்தோனிடேவிட் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

தனி நல வாரியம் கோரி எலக்ட்ரீசியன்கள் ஆா்ப்பாட்டம்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

துணை மின்நிலைத்தில் திடீா் தீ
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

