மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழகத்தில் இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்: வைகோ

தமிழகத்தில் நடைபெற இருக்கிற மக்களவை தேர்தலின் மூலம் இளைஞர்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், தமிழகத்தின் ஆதரவு இல்லாமலே மத்தியில் நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமையும் எனவும் என

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:45 am

எஸ். பாண்டியன்

தமிழகத்தில் நடைபெற இருக்கிற மக்களவை தேர்தலின் மூலம் இளைஞர்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், தமிழகத்தின் ஆதரவு இல்லாமலே மத்தியில் நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமையும் எனவும் என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவை தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப்பேரவை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை லட்சுமி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் வைரமுனி தலைமை வகித்தார். பா.ஜ.கவின் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் வரவேற்புரை வழங்கினார். இதில், வைகோ பங்கேற்று பேசியதாவது: இதுவரையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுடன் தமிழகத்தின் அதிமுக, திமுக மீண்டும், மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்தது. இந்த  மக்களவை தேர்தல் மூலம் அந்த நிலை மாறுகிறது. தமிழகத்தில் இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

இந்தியா முழுவதும் நரேந்திமோடியின் அலை வீசுவதால், கட்டாயம் மாற்றத்தை தருவார் என நம்புகிறார்கள். ஊடகங்களின் தகவல் பொய்த்து போகும் அளவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணியினர் பெரும்பாலன இடங்களை கைப்பற்றுவார்கள். விருதுநகர் மக்களவை தொகுதியில் நான் போட்டியிடுகிறேன் என்று ஊகத்தின் அடிப்படையில் கட்சியினர் கூறுகின்றார்கள். இத்தொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது. நாளைதான் யாரை நிறுத்துவது என முடிவு செய்து அறிவிக்கப்படும். இப்போதே வெற்றி பெற்று விட்டோம் என தொண்டர்கள் உட்கார்ந்து விடக்கூடாது. அதற்காக தேர்தல் களத்தில் வியூகம் வகுத்து கடுமையாக போராட வேண்டும். தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலே நரேந்திரமோடி ஆட்சி அமைப்பார். தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

இது இலங்கை அதிபர் ராஜபட்ச, காங்கிரஸ் மற்றும் மாநிலத்தில் முக்கிய கட்சிககள்  ஆகியவைகளுக்கு பெரும் பாடமாக அமையும். இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்களை கொன்றது, அவர்களுக்கு இழைக்கப்பட கொடுமை, 578 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் சுட்டுக் கொன்றது போன்றவைகளை காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்தவர்கள் வேடிக்கைதானே பார்த்து கொண்டிருந்தார்கள். 2010-க்கு பிறகு இப்பிரச்னைகளை நினைத்து தமிழக மக்கள் கொதிநிலை அடைந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் காங்கிரஸிற்கு சரியான பாடம் கற்பிப்பார்கள். உண்மையான, நேர்மையான, ஊழலற்ற அரசை மத்தியில் நரேந்திரமோடி அமைப்பார். அனைவரும் இலக்கு நிர்ணயித்து அந்தந்த கிராமத்தில் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியாற்றும் படி தொண்டர்களை வைகோ கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் மதிமுக, தேமுதிக, பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.