நித்திரவிளை அருகே மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 600 லிட்டர் மண்ணெண்ணெய்யை பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இனயம் சின்னத்துறை பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் அப்பகுதி வழியே வந்த மினி டெம்போவை நிறுத்த சைகை காட்டினர். நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் சிறிது தூரம் துரத்திச் சென்று பிடித்தனர்.
தொடர்ந்து வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் 3 பேரல்கள் மொத்தம் 600 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்ததும் அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. மண்ணெண்ணெய் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பறக்கும்படை தாசில்தாராக கண்ணன் பதவியேற்ற மறுநாள், கேரளத்துக்கு கடத்த முயன்ற மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

