விருதுநகர் அருகே தனக்கு தானே வயிற்றை கிழித்து இளைஞர் தற்கொலை
விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச் சேர்ந்த ராமசாமியின் மகன் செல்வக்குமார்(28). இவர் வாய் பேசாத, காதும் கேட்காத நிலையில் இப்பகுதியில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார்.


விருதுநகர் அருகே தனக்கு தானே மூட்டை தூக்கும் கொக்கியால் வயிற்றை கிழித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச் சேர்ந்த ராமசாமியின் மகன் செல்வக்குமார்(28). இவர் வாய் பேசாத, காதும் கேட்காத நிலையில் இப்பகுதியில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தனக்கு திருமணம் முடித்து வைக்கக் கோரி நாள்தோறும் பெற்றோர்களை வலியுறுத்தி வந்தாராம். இதையடுத்து பெற்றோர்களும் பெண் பார்த்து வந்துள்ள நிலையில் அமையவில்லையாம். இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்த செல்வக்குமார் திருமணத்தை சீக்கிரம் முடித்து வைக்க வேண்டும் எனக் கூறி தகராறு செய்தாராம். பின்னர், பெண் அமையாத ஆத்திரத்தில் மூட்டை தூக்கும் ஊக்கு கொக்கியால் தனக்கு தானே வயிற்றை கிழித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதில், குடல் சரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பாண்டியன் நகர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...