/

புதுக்கோட்டையில் இன்று முதல் 2 நாட்கள் சைவத் திருமுறை மாநாடு

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதினம் சார்பாக சைவத் திருமுறைகளில் அருளியல் கலைகள் சமுதாயம் பற்றிய 2 நாள் கருத்தரங்கம் நகர்மன்ற கட்டிடத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:39 am

பொ. ஜெயசந்திரன்

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதினம் சார்பாக சைவத் திருமுறைகளில் அருளியல் கலைகள் சமுதாயம் பற்றிய 2 நாள் கருத்தரங்கம் நகர்மன்ற கட்டிடத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

தொடக்கவிழா நிகழ்ச்சியாக மங்கல விளக்கு ஏற்றுதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் காமாட்சிபுரி ஆதினம், சீர்வளர்சீர் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், சிதம்பரம் மௌன மடம் சுந்தரமூர்த்தி சுவாமிகள், பொற்கிழிக்கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம், செந்தமிழ்வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார், அரவனைச் செம்மல், சீனு.சின்னப்பா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

மாலை 4 மணிக்கு சிவத்திரு நாச்சியப்பன் மற்றும் சிவனடியார் பங்கேற்கும் திருமுறை திரு வீதிவுலா பேரணி.

மாலை 6.30க்கு கருத்தரங்கம் இதில் பேரா.அய்க்கண் பேரா.சண்முக செல்வகணபதி குடவாயில் பாலசுப்பிரமணியன் கலைமாமணி நர்த்தகி நடராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இரவு 8 மணிக்கு ஸ்ரீசாய் நாட்டியாலயா மாணவ மாணவியர் பங்கேற்கும் திருமுறை நாட்டியம் நடைபெறும். நாளை காலை 10 மணிக்கு சைவத் திருமுறைகளில் மகளிர் என்ற தலைப்பில் கருத்தரங்கம். பிற்பகல் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல். மாலை 6 மணிக்கு சமுதாய கருத்தரங்கில் தவத்திரு ஊரன்அடிகாளர், முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன், பேராசிரியர்.தெ.முருகசாமி 8 மணிக்கு சென்னை பசுமை தீர்ப்பாயம் நீதிபதி, மாண்பமை நீதியரசர் எம்.சொக்கலிங்கம், மாநாட்டுப் பேரூரையாற்றுகிறார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருமுறை மாநாட்டுக்குழுவின் நிறுவனர் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் மற்றும் இதர நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.