நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் புழக்கத்தை தடுக்க அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. சிறைக்காவலர்கள் கைதிகளின் அறைகளை சனிக்கிழமை சோதனை செய்தனர். 16வது

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:36 am

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் புழக்கத்தை தடுக்க அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. சிறைக்காவலர்கள் கைதிகளின் அறைகளை சனிக்கிழமை சோதனை செய்தனர். 16வது அறையில் சோதனை செய்தபோது அங்குள்ள கழிப்பறையின் பின்புறம் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சிறைக்காவலர்கள் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அந்த செல்போன் தண்டனை கைதி சென்னை எழும்பூர் அன்னை சிவகாமிநகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்த தனசேகரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதுதொடர்பாக கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிறை அதிகாரி சேகர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.