அரசு நிதியில் ரூ.13 லட்சம் முறைகேடு: ஊராட்சி தலைவர் பதவி நீக்கம்
ஊராட்சி நிதியில் ரூ.13 லட்சம் முறைகேடு செய்ததாக மேல்ராதாம்பூர் ஊராட்சி தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதேபோல் புகாருக்குள்ளான மேலும் 13 ஊராட்சி தலைவர்கள் மீதும் விசாரணை


ஊராட்சி நிதியில் ரூ.13 லட்சம் முறைகேடு செய்ததாக மேல்ராதாம்பூர் ஊராட்சி தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதேபோல் புகாருக்குள்ளான மேலும் 13 ஊராட்சி தலைவர்கள் மீதும் விசாரணை நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டத்தில் 683 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு குடிநீர், மின்சாரம், தெருவிளக்குகள் பராமரித்தல், சாலை பராமரிப்பு, அரசு கட்டிடங்கள் பராமரிப்பு போன்றவற்றுக்காக அரசு நிதி வழங்குகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சியும் அரசிடம் இருந்து ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் நிதி பெறுகின்றன.
இதுதவிர வீட்டுவரி, தொழில்வரி, கடை வாடகை போன்றவற்றின் மூலமும் ஊராட்சிகளுக்கு பணம் வருகிறது. ஆனால் இந்த நிதியை ஊராட்சி தலைவர்கள் முறைகேடாக பயன்படுத்தி, ஊராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தும் போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த 10 மாதங்களில் மட்டும் ஊராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக 4 ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் மேல்ராதாம்பூர் ஊராட்சி தலைவர் ஜெயபாலன், ஊராட்சி நிதியில் முறைகேடு செய்து, ஊராட்சிக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு ஏற்படுத்தியதாக ஆட்சியருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் உத்தரவின் பேரில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் தேவநாதன் விசாரணை நடத்தி ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் ஜெயபாலனை பதவி நீக்கம் செய்து ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் சனிக்கிழமை உத்தரவிட்டார். இதேபோல் கடலூர் மாவட்டத்தில் மேலும் 13 ஊராட்சி தலைவர்கள் மீதும் ஊராட்சி நிதியில் முறைகேடு செய்து, ஊராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...