ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தங்கையிடம் மோசடியாக நிலம் பறிப்பு: அண்ணன் உள்பட 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையைச் சேர்ந்தவர் ந.அரியம்மாள்(45). இவருக்கு சொந்தமான 575 சதுரடி நிலத்தில், கடந்த 2000ஆம் ஆண்டு வீடு கட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு, அதே

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:56 am

ஆ. நங்கையார் மணி

சொந்த தங்கையின் நிலத்தை மோசடி செய்து, தனது பெயருக்கு மாற்றிய அண்ணன் உள்பட 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையைச் சேர்ந்தவர் ந.அரியம்மாள்(45). இவருக்கு சொந்தமான 575 சதுரடி நிலத்தில், கடந்த 2000ஆம் ஆண்டு வீடு கட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு, அதே பகுதியில் 21 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலையில், இந்த சொத்துக்கள் அனைத்தையும், அதேபகுதியில் வசித்து வரும் தனது சகோதரர் வெ.பெரியசாமி(48) என்பவர் மோசடியாக தனது பெயருக்கு மாற்றிவிட்டாராம்.

இதனை அடுத்து, தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அரியம்மாள் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு தனிப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.அதன்பேரில் வழக்கு பதிவு செய்த நில அபகரிப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் ச.சத்தியநாராயணன், பெரியசாமி அவரது தாயார் மருதாயம்மாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய 4 பேரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அதன்விவரம்: குஜிலியம்பாறையைச் சேர்ந்த வெ.பெரியசாமி, ந.வெள்ளைத்தாய்(எ) வெள்ளையம்மாள்(36), மு.நாகராஜ், ரெ.துரைச்சாமி(48).

இதுகுறித்து சார்பு ஆய்வாளர் சத்தியநாராயணன் தெரிவித்தது:

அரியம்மாளின் மகளை, தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெரியசாமி முயற்சித்துள்ளார். ஆனால் அரியம்மாள் வேறு இடத்தில் மகளை திருமணம் செய்து கொடுத்ததால், அவரிடம் உள்ள சொத்துக்களை மோசடி செய்து பறிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு தனது தாய் மருதாயம்மாளின் உதவியுடன், அரியம்மாளின் குடும்ப அட்டை, சொத்துப் பத்திரம் ஆகியவற்றை பெரியசாமி பெற்றுள்ளார். அதன் மூலம் வெள்ளையம்மாளை, அரியம்மாள் என கூறி பத்திரப்பதி்வு செய்துள்ளனர். இதற்கு சாட்சியாக நாகராஜ், துரைச்சாமி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்றார்.

கைது செய்யப்பட்ட 4 பேரும், திண்டுக்கல் 2ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.