வாணியம்பாடியிலிருந்து வேலூர் நோக்கி ஒரு லாரி சென்றது. அது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோர வீட்டிற்குள் புகுந்துள்ளது. அதில் அந்த வீட்டிற்கு வெளியே அமர்ந்து பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த தாயம்மாள் (50) படுகாயமடைந்தார். மேலும் அங்கே அமர்ந்திருந்த அவரது உறவினர்கள் பாலாமணி (32), லட்சுமி (28), பக்கத்து வீட்டை சேர்ந்த ராசாத்தி (38), நிரோஷா (23) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.