அப்போது, அங்கே ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரிடம் ஏதோ தகவல் கேட்டாராம். அதில் அந்த இருசக்கர வாகனத்தில் வந்த பிரவீன், செந்தில்குமார், செந்தில் ஆகிய மூவருடனும் இவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூவரும், ஜெயக்குமரேஷை நோக்கி, “நீ என்ன திருநங்கையா? நாங்கள் மூவரும் போலீஸார். உன்னை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்று முட்டிக்கு முட்டி தட்டி... “ என்ற ரீதியில் மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தையும் ஏடிஎம் கார்டு முதலானவைகளையும் பறித்துக் கொண்டு சென்றுவிட்டனராம். அந்த நேரத்தில் ஜெயக்குமரேஷிடம் ஏடிஎம் கார்டு பின் நம்பர் கேட்டு வாங்கியுள்ளனராம்.