கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பூதம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல்(37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யபாமா. இவரிடம் வரதட்சணை கேட்டு கந்தவேல் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. வரதட்சணை கொடுக்க மறுத்த சத்யபாமாவை கடந்த 2008ஆம் ஆண்டு உயிரோடு தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கந்தவேலை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த கந்தவேல், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவானார். அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எஸ்பி ஆராதிகா உத்தரவிட்டார்.