/

நடந்து சென்ற பெண்ணிடம் 9 சவரன் நகை பறிப்பு

விருதுநகர் அருகே லட்சுமி நகர் 1-வது தெருவைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மனைவி மனோகரி(45). இவர் கடைக்கு பொருள்கள் வாங்குவதற்காக திங்கள்கிழமை மாலையில் வீட்டை விட்டு வெளியேறி

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:49 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வீட்டிற்கு வெளியே வந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 9 சவரன் நகையை பைக்கில் வந்த மர்ம நபர் பறித்து சென்றது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே லட்சுமி நகர் 1-வது தெருவைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மனைவி மனோகரி(45). இவர் கடைக்கு பொருள்கள் வாங்குவதற்காக திங்கள்கிழமை மாலையில் வீட்டை விட்டு வெளியேறி வந்தாராம். அப்போது, சிறிது தூரம் சென்ற நிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் கண் இமைக்கும் நேரத்திற்குள் கழுத்தில் கிடந்த 9 சவரன் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளார். அதையடுத்து நகையை பறிக்க விடாமல் தடுப்பதற்காக மனோகரி போராடியுள்ளார். அதோடு, அருகில் உள்ளவர்களை சத்தமிட்டு உதவிக்கு வரும் படி அழைத்துள்ளார். அதற்குள் பொதுமக்கள் வருவதை அறிந்த மர்ம நபர் நகையை பறித்துக் கொண்டு வாகனத்தில் தப்பினாராம்.

இது தொடர்பாக விருதுநகர் ஊரக பகுதி பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் மனோகரி புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மாலையில் வீட்டை வெளியேறி வந்த பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.