/

விருதுநகர் அருகே கருந்திரி கூடாரங்களில் போலீஸார் ஆய்வு: 1475 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல்

விருதுநகர் அருகே அனுமதியின்றி இயங்கி வரும் கருந்திரி தயாரிப்பு கூடாரங்களில் ஆமத்தூர் போலீஸார் தீவிர ஆய்வு மேற்கொண்டு கரிமருந்து, சல்பர் ஆகிய மூலப்பொருள்கள் மற்றும் கருந்திரி கட்டுக்களையும்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:48 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அனுமதியின்றி இயங்கி வரும் கருந்திரி தயாரிப்பு கூடாரங்களில் ஆமத்தூர் போலீஸார் தீவிர ஆய்வு மேற்கொண்டு கரிமருந்து, சல்பர் ஆகிய மூலப்பொருள்கள் மற்றும் கருந்திரி கட்டுக்களையும் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் அருகே கடந்த வாரம் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கருந்திரி கூடாரத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஒண்டிப்புலிநாயக்கனூரில் குடியிருப்பு பகுதிகளில் கூடாரம் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை தயாரித்து வருகிறவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கருந்திரி தயார் செய்யும் கூடாரங்களில் ஆய்வு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சூலக்கரை காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் தீவிர ஆய்வு செய்தனர்.

அதில், ஒண்டிப்புலிநாயக்கனூரைச் சேர்ந்த ராமூர்த்தி(40) என்பவருக்கு சொந்தமான கூடாரத்தில் ஆய்வு செய்ய போலீஸார் வருவதை அறிந்து தப்பியோடினார். அங்கு ஆய்வு செய்ததில் கரிமருந்து 200 கிலோ, 275 கிலோ சல்பர் மூடைகள் மற்றும் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். அதேபோல், குமார்(39) என்பவரின் கூடாரத்தில் 275 கிலோவும், சசிக்குமார்(38) என்வரின் கூடாரத்தில் 550 கிலோவும் மற்றும் பாண்டி(45) என்பவரின் கூடாரத்தில் 175 கிலோவும் என மொத்தம் 1450 கிலோ மூலப்பொருள்களையும், பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.