விருதுநகர் அருகே கருந்திரி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறி சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் தலா ரூ.30 ஆயிரம் நிதி உதவியை செவ்வாய்கிழமை வழங்கினார்.
விருதுநகர் அருகே ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தில் கம்மாபட்டி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கருந்திரி தயாரிப்பு கூடாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேலை செய்து கொண்டிருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த அருமைதுரை(45) அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் சிதறிய கற்கள் காலனி குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் வீட்டிற்கு முன்பு இருந்த சின்ராஜ் மகள் காளீஸ்வரி(7), சந்தோஷம் என்பவரின் மனைவி பொன்னம்மாள்(70) மற்றும் காளிராஜ்(13) ஆகியோர் காயம் அடைந்து உயிரிழந்தனர். அதேபோல், விபத்தில் படுகாயம் அடைந்த சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த துரைராஜ்(42) மற்றும் சங்கரவேல்(45) ஆகியோர் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இந்நிலையில் தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
இதையறிந்த விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் தனது ஆதாரவாளர்கள் ஆகியோருடன் ஒண்டிப்புலிநாயக்கனூர் மற்றும் சங்கரலிங்காபுரம் கிராமங்களுக்கு நேரில் சென்று உயிரிழந்தோர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் எம்.எல்.ஏ சொந்த நிதியிலிருந்து ரூ.25 ஆயிரமும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரமும் சேர்த்து தலா ரூ.30 ஆயிரம் உதவித் தொகையை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார். அதேபோல், விருதுநகர் அரசு மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றவர்களை சந்தித்து ஆறுதல் கூறி எம்.எல்.ஏ தலா ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையையும், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரூ.1000 ரொக்கமாகவும் வழங்கினார்கள்.
உடன் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் தர்மா நகர இளைஞரணி செயலாளர் ஐ.ஆர்.மகேந்திரன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!
வீடியோக்கள்

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

