அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அன்னப்பராஜா தலைமையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஒண்டிப்புலிநாயக்கனூரில் சட்டவிரோதமாக கருந்திரி ஆலையை நடத்தி வந்த அய்யப்பன்(37) என்பவரின் வீட்டிலிருந்து பசைமாவு 800 கிலோ, சல்பர் 90 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், ஒண்டிப்புலிநாயக்கனூர் அதிமுக கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம்(55) என்பவரின் வீட்டிலிருந்து வெள்ளைத்திரி 13800 கட்டுக்கள், மணிமருந்து 10 கிலோ, 18000 கருந்திரி கட்டுக்களையும், இதேபகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் வீட்டிலிருந்து கருந்திரி 6620 கட்டுக்களும், வெள்ளைத்திரி 640 கட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு மொத்தம் ரூ.3.50 லட்சம் ஆகும்.