போலீஸார் துப்பாக்கியால் சுட்ட தன் மகனுக்கு சிகிச்சை முறையாக அளிக்காததால், அவரது உடல் நிலை சீராக இல்லை என அவனது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய நீலாங்கரைப் போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை வெட்டுவாங்கனியைச் சேர்ந்த சபீனா பேகம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விவரம்: என்னுடைய இளைய மகன் தமிம் அன்சாரி (15). குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் டெக்ஸ்டைல் கடையில் வேலை செய்கிறான்.
ஜனவரி மாதம் 6-ஆம் தேதி வேவைக்குச் சென்ற தமிம், 7-ஆம் தேதி மாலை வரை வீட்டு திரும்பவில்லை. அப்போது, நீலாங்கரை போலீஸார் அவனை துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்தது. கொடூரமாகத் தாக்கப்பட்டதில் எனது மகன் சுயநினைவு இல்லாமல், சிகிச்சைக்காக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
எனது மகன் எதற்காக கைது செய்யப்பட்டான், எப்போது கைது செய்யப்பட்டான் என்று இதுவரை போலீஸார் என்னிடம் தெரிவிக்கவில்லை. எனவே, எனது மகனுக்கு தொடர்ந்து நவீன முறையில் சிறப்பான சிகிச்சை அளித்து, அவனது உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
சட்டவிரோதமாக எனது மகன் கைது செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தியது தொடர்பாக அமர்வு நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (ஜன.28) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்குரைஞர் சங்கரசுப்பு ஆஜராகி, போலீஸார் துப்பாக்கியால் சுடப்பட்டதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி குண்டு பாயந்ததால் அவனது கழுத்தை சிரமமில்லாமல் முழுவதுமாக திருப்ப முடியவில்லை என வாதாடினார்.
அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞர் தம்பிதுரை ஆஜராகி, டாக்டர்களின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார். சிறுவன் நலமாக இருக்கிறான். தற்போது வெளி நோயாளிகள் பிரிவில் தான் அவனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. வீட்டுக்கு அனுப்புவதற்கு அவன் குதியாக உள்ளான். மேலும், அரசு அவனது குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிவாரணை உதவியாக வழங்கியுள்ளது. இது தவிர, அவனது அனைத்து மருத்துவ செலவுகளையும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என வாதாடினார்.
இவரது வாதத்துக்கு மனுதாரர் வழக்குரைஞர் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்து, அவனது உடல்நிலை சீராக இல்லை. அவனது உடல் சீரான நிலைக்கு வர, கூடுதல் சிகிச்சை தேவைப்படுகிறது என வாதாடினார்.
இருவரது வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய நீலாங்கரை போலீஸாருக்கு உத்தரவிட்டனர். அதுவரை அந்த சிறுவனை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பக் கூடாது என உத்தரவிட்டு பிப்ரரி 12-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

