ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மு.க.ஸ்டாலின் நாளை நாமக்கல் வருகை

நாமக்கல்லில் சனிக்கிழமை நடக்க உள்ள திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:12 am

தமிழ்ச்செல்வன்

நாமக்கல்லில் சனிக்கிழமை நடக்க உள்ள திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாமக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை வருகை தர உள்ளார்.

கோவையில் கட்சிக் கூட்டத்தை முடித்துக் கொண்டு பள்ளிபாளையம் வழியாக நாமக்கல்லுக்கு இரவு 7 மணிக்கு வர உள்ளார். இதையொட்டி, மாவட்ட திமுக சார்பில் பள்ளிபாளையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் திருச்சி சாலை நளா ஹோட்டலில் நடக்க உள்ள திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார் என்று மாவட்ட திமுக செயலரும், மத்திய முன்னாள் இணை அமைச்சருமான செ.காந்திசெல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.