இதனால் அச்சமடைந்துள்ள ரமேஷின் மனைவி சந்திரா(24), குடும்பத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை மனு அளித்தார். அப்போது சந்திரா கூறுகையில், ஏற்கனவே எனக்ரு 1.5 வயதில் பெண் குழந்தை இருப்பதுடன், தற்போது 8 மாத கர்ப்பிணியாகவும் உள்ளேன். மகாராஷ்டிர மாநிலத்துக்கு சரக்கு கொண்டு சென்று கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எனது கணவர் ரமேஷ் குறித்து 20-ம் தேதிக்கு பிறகு எந்த தகவலும் இல்லை. லாரி உரிமையாளரிடம் இருந்தும் எவ்வித ஒத்துழைப்பும் இல்லை. எனவே, வழிப்பறிக் கொள்ளையர்களால் கடத்தப் பட்ட எனது கணவர் ரமேஷை கண்டுபிடித்து மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.