நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் பகுதியில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு குலதெய்வ கோயில்களில் வழிபாடு

விருதுநகரில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீசொக்கநாதர் ஆலயத்தில் வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதேபோல், தேசபந்து மைதானத்தில் உள்ள வாலசுப்பிரமணிய

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:31 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் பகுதியில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு குலதெய்வ திருக்கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

விருதுநகரில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீசொக்கநாதர் ஆலயத்தில் வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதேபோல், தேசபந்து மைதானத்தில் உள்ள வாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் ராமர் திருக்கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு பூஜை மற்றும்  பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், இரவு முழுவதும் பஜனையில் பங்கேற்ற பக்தர்களுக்கு குங்குமம் மற்றும் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

இதேபோல், விருதுநகர்-அழகாபுரி சாலை, விருதுநகர்-சிவகாசி சாலை, சிவகாசி-எரிச்சநத்தம் சாலை, விருதுநகர்-வத்திராயிருப்பு சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காட்டு பகுதி மற்றும் சாலையோர கிராமங்களில் உள்ள குலதெய்வ கோயில்களில் வழிபாடு நடத்துவதற்காக குவிந்தனர். அங்கு சுவாமி ஆலயத்திற்கு முன்பு பந்தலிட்டு மின் விளக்கு ஆகியவைகளால் சுவாமி சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நிகழ்ச்சியில் கிராம மக்கள் பங்கேற்றனர். அதையடுத்து, காலையில் பொங்கலிட்டு, ஆடு, கோழிகள் பலியிட்டு உறவினர்களுடன் விருந்து சாப்பிட்டு கலைந்து சென்றனர்.

எனவே சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள  காட்டுப் பகுதியில் எங்கு பார்த்தாலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பஸ்களில் கூட்டம்: அதேபோல், வெள்ளிக்கிழமை காலையில் இருந்து மாலை வரையில் பஸ்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அதேபோல், கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. எந்தப் பேருந்தில் ஏறினாலும் கூட்டம் இருந்தது. இதுபோன்ற காரணங்களால் குழந்தைகளுடன் வந்த பெண்கள் மற்றும் முதியோர்கள் உள்ளிட்டோர்  மிகவும் சிரமப்பட்டனர். அதையடுத்து, போலீஸார் விரைந்து வந்து பஸ்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.          

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.