தமிழக அரசைக் கண்டித்து எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்வதற்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்து விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸார்


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்வதற்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்து விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் செவ்வாய்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமை வகித்து பேசுகையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு பின்னரே நீதிமன்றத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வைகோ, நெடுமாறன், சீமான் உள்ளிட்டோரும், வாக்குகள் இல்லாத உதிரி கட்சிகளை சேர்ந்தவர்களும் விடுதலை செய்ய வேண்டும் குரல் கொடுத்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமரை குண்டு வைத்து கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் தான் வைகோ தொடர்ந்து 15 ஆண்டுகளாக தோற்றுக் கொண்டே வருகிறார். இதற்கு துணையாக நிற்கும் தமிழக முதல்வருக்கு பல்வேறு சமயங்களில் காங்கிரஸ் கட்சிதான் ஆதாரவாக இருந்துள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என முதல்வர் கூறி வருகிற நிலையில், ஒரு இடங்களில் கூட அதிமுகவால் வெற்றி பெற முடியாத நிலையேற்பட போகிறது.
இதேபோல் தமிழகம் முழுவதும் சிறைச்சாலைகளில் உள்ள கொலை கைதிகள் 3700 பேரை விடுதலை செய்ய முடியுமா?. இதன் மூலம் விவசாய கல்லூரி மாணவிகளை பஸ்ஸில் வைத்து உயிரோடு எரித்த வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை பெற்று வரும் கட்சிக்காரர்களை விடுவதற்கு முன்னேற்பாடகாவே இருக்குமோ என்ற சநதேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராமங்கள்தோறும் பிரச்சார இயக்கத்தின் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களிடம் நேரடியாக நீதி கேட்க போகிறோம் என எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வேலாயுதம், ஐ.என்.டி.யூ.சி சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியம், நகரத் தலைவர் பாப்கான் கார்த்திகேயன், முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சாமுவேல், மக்களவை பொதுச்செயலாளர் பால்பாண்டி, திருமங்கலம் சட்டப்பேரவை தலைவர் கார்த்திகேயன், சட்டப்பேரவை பிரதிநிதி வைரவசாமி, மக்களவை துணைச் செயலாளர் பிச்சைக்கனி, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் சுப்புக்காளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...