மார்த்தாண்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உருவ பொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் 17 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரது பெயர்களை வெளியிட்டு இவர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள் என பேட்டியளித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரமேஷ்குமார், எஸ். ராஜேஷ்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் சிலர் சனிக்கிழமை மார்த்தாண்டத்தில் அரவிந்த் கேஜரிவாலின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சகாயஜோஸ் ஆன்டனி அளித்த புகாரின் பேரில் போலீஸார், ரமேஷ்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் 17 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

