நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர் 2-வது நாளாக வேலை நிறுத்தம்: சாலை மறியலில் ஈடுபட்ட 49 பேர் கைது

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 12-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:47 am

சி.சண்முகவேல்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 12-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து மற்ற தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக திங்கள்கிழையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 திங்கள்கிழமை தொடங்குவதாக இருந்த இப்போராட்டம் அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமையே தொடங்கியது. அதனால் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டும் பேருந்துகளை இயக்கினர். இதனால் குறைவான பேருந்துகள் இயங்கின.

 இதனிடையே, திருச்சி ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பொதுமக்கள் பாதிக்காதவாறு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

 அதன்படி திங்கள்கிழமை காலை திருச்சி கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையினை பார்வையிட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி அங்கு போராட்டத்தில் பங்கேற்காத ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

 இதை தொ.மு.ச, சி.ஐ.டி.யு தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 11-சங்கத்தின் தொழிலாளர்கள் சில பணிமனைகளில் பேருந்துகளை இயக்க விடாமல் தடுத்தனர்.

இதனால் சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூருக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர். எனினும் மாநகரப் பகுதி பொருத்தவரை மாலை வரை 70 சதவீதம் பேருந்துகள் இயங்கின.

 மேலும் தனியார் பேருந்துகள், ஷேர் ஆட்டோ உள்ளிட்டவை இயங்கியதால் நகரப் பகுதி மக்களுக்கு பாதிப்பில்லை. லால்குடி, துறையூர், மணப்பாறை, துவாக்குடி உள்ளிட்ட பணிமனைகளிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் 75 சதவீதம் இயங்கின.

 சாலை மறியல்: கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மலைகோட்டை பணிமனை முன்பு தொமுச கிளைச் செயலர் கோபி, சிஐடியு சங்க செயலர் ஆகியோரிóன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரும், கன்டோன்மென்ட பகுதியிலுள்ள பணிமனை முன்பு மறியலில் ஈடுபட்ட 29 பேரையும் போலீஸôர் கைது செய்தனர்.

 9 பேருந்துகள் சேதம்: திருச்சியிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மன்னார்புரம் அருகே சென்ற போது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இது தொடர்பாக டி.வி.எஸ்.டோல்கேட்டிலுள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை, தொமுச நிர்வாகிகள் கருணாநிதி, பழனியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 இதே போல் கே.கே.நகரில் இரண்டு பேருந்துகளும், திண்டுக்கல் சாலை கள்ளிக்குடி, சோழன் நகர், திருச்சி நீதிமன்றம், தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 6 பேருந்துகளும் சேதப்படுத்தப்பட்டன. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து பேருந்துகளை சேதப்படுத்திய நபர்களை தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.