மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

விருதுநகரில் மகளிர் நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் செயலாளர் சுப்புராம் முன்னிலை

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:44 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மகளிர் நீதிமன்றத்தை தொடங்க வேண்டும் என்பதை வலியிறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் செவ்வாய்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் செயலாளர் சுப்புராம் முன்னிலை வகித்தார். இதில், பொருளாளர் ராமமூர்த்தி போராட்டத்தை தொடங்கி வைத்தார். இப்போராட்டத்தில் அரசு உத்தரவிட்டபடி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தை தலைநகர் விருதுநகரில் அமைக்கவும், கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு கூடுதலாக அதிகாரம் வழங்கி முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் விருதுநகர் வழக்குரைஞர்கள் சங்கங்களைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.