மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

தமிழ் செம்மல் விருது பெற தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழகத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் தமிழ் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ் தொண்டினை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ் செம்மல் விருது

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:43 am

எஸ். பாண்டியன்

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் வழங்கப்படும் தமிழ் செம்மல் விருது பெற தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

தமிழகத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் தமிழ் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ் தொண்டினை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ் செம்மல் விருது தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் பணமுடிப்பு பரிசுத் தொகையாகவும் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இந்த விருது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ஒருவருக்கு வழங்கப்பட இருக்கிறது.

இந்த விருது பெற விண்ணப்பிப்போர் தமிழ் வளர்ச்சி துறையால் வழங்கப்படும் விருதினை இதற்கு முன்பு பெற்றிருத்தல் கூடாது. அகவை முதிர்ந்த தமிழறிஞர், எல்லைக் காவலர், தமிழறிஞர் நிதி உதவி பெற்று வருகின்றவராக இருக்க கூடாது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இம்மாதம் 28-ம் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி துணை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.