விருதுநகர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வில் 44341 பேர் பங்கேற்றனர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 பிரிவில் அடங்கிய பணிகளான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரி தண்டலர், வரைவாளர், நில அளவர் உள்பட 4963 காலி


விருதுநகர் மாவட்டத்தில் 107 மையங்களில் நடந்த குரூப்-4 தேர்வில் 44341 பேர் வரையில் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். மேலும், இதில் 6857 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 பிரிவில் அடங்கிய பணிகளான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரி தண்டலர், வரைவாளர், நில அளவர் உள்பட 4963 காலி பணியிடங்களுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இத்தேர்வு எழுதுவதற்காக 51198 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இதேர்வுக்காக விருதுநகரில் 9 மையங்களும், அருப்புக்கோட்டையில் 15 மையங்களிலும், காரியாபட்டியில் 8 மையங்களிலும், ராஜபாளையத்தில் 26 மையங்களிலும், சாத்தூரில் 9 மையங்களிலும், சிவகாசியில் 18 மையங்களிலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 17 மையங்களிலும், திருச்சுழியில் 5 மையங்களிலும் மொத்தம் 107 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் அந்தந்த வட்டார பகுதிகளில் இருந்து பட்டதாரிகள் தேர்வு எழுதுவதற்காக குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையங்களுக்கு வந்து குவிந்தனர். அதையடுத்து காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 1 மணி வரையில் இத்தேர்வு நடைபெற்றது. இதில், மொத்தம் 44341 பேர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். அதில் 6857 பேர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.
இது குறித்து செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர் கூறுகையில், தமிழில் எளிதாக கேள்விகள் இருந்தாலும், பொறுத்துக அனைத்தும் பத்திகளின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்ததால் சிந்தித்து பார்த்து விடையளிக்க வேண்டியிருந்தது. அதேபோல், கணக்கும் எளிதாக விடையளிக்க முடியாத வகையில் கேள்விகள் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...