விக்கிரமசிங்கபுரத்தில் கோவில் பூசாரி கல்லால் அடித்துக் கொலை
விக்கிரமசிங்கபுரத்தில் அய்யா கோவில் பூசாரியை மர்ம நபர்கள் தலையில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.


விக்கிரமசிங்கபுரத்தில் அய்யா கோவில் பூசாரியை மர்ம நபர்கள் தலையில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், நெட்டப்புளித்தெரு, காந்தி நகரில் அய்யாவழி கோயில் உள்ளது. அதில் அதே பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மகன் அற்புத சாமி (85) பூசாரியாக இருந்தார். இவர் கோயிலிலேயே தங்குவாராம். சனிக்கிழமை இரவு இவர் கோவிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரது தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்து விட்டனராம்.
இது குறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிமாறன், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் விக்கிரமசிங்கபுரம் போலீஸார் உடலை பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...