ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

நாமக்கல்லில் தீவிரவாதிகள் பதுங்கல்?

இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த தனிப்படை போலீஸார், சனிக்கிழமை பதல் 12.30 மணியளவில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட முயன்ற போது அந்த வீட்டில் இருந்த

Updated On :20 டிசம்பர் 2014, 8:59 am

நாமக்கல்-திருச்சி சாலையில் நாகராஜபுரம் பகுதியில் சகுந்தலா(62) என்பவரின் வீட்டு மாடியில் 4 பேர் வசித்து வந்துள்ளனர். இவர்களது நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த தனிப்படை போலீஸார், சனிக்கிழமை பதல் 12.30 மணியளவில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட முயன்ற போது அந்த வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பி ஓட முயன்றுள்ளார்.போலீஸார் அவரை சுற்றி வளைத்து பிடித்து அழைத்துச்சென்றுள்ளனர். மேலும் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து துப்பாக்கிகளையும், மூட்டையாக கட்டப்படிருந்த வெடி பொருட்கள் போன்ற மர்ம பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.4 பேரும் கல்லூரி மாணவர்கள் என்று கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இங்கு தங்கியதாக கூறப்படுகிறது. தங்கியிருந்தவர்கள் யார், எந்த போலீஸார் கைது செய்தனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. உள்ளூர் போலீஸார் எங்களுக்கு எதுவும் தெரியாது என்கின்றனர். இதனால் இப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.