பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகர் மாவட்டத்தில் தனிநபர் கழிப்பறை அமைப்பது தொடர்பாக பாராசூட் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம்

தனிநபர் கழிப்பறை அமைப்பது தொடர்பாக பாராசூட் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை முதன் முறையாக விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை பின்பற்றப்பட இருப்பதாகவும் அந்த துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:41 am

எஸ். பாண்டியன்

தனிநபர் கழிப்பறை அமைப்பது தொடர்பாக பாராசூட் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை முதன் முறையாக விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை பின்பற்றப்பட இருப்பதாகவும் அந்த துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 450 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி கிராமங்களில் முழு சுகாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், கிராமங்களில் பொதுமக்கள் கழிப்பறையாக சாலையோரங்களையும், முள்புதர் போன்ற இடங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் நோய்த்தொற்று போன்ற சுகாதாரக்கேடுகளும் விளைவிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுப்பதற்கு ஒவ்வொரு கிராமங்களிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, சிறுமிகள் மற்றும் வயதான பெண்கள் பயன்படு்த்தும் நவீன கழிப்பறை, குளியல்தொட்டி ஆகிய வசதியுடன்  மகளிர் சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்து ஆண்டு முதல் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தலா 1 கிராமங்கள் தேர்வு செய்து ஆண்கள் பயன்படுத்தும் சுகாதார வளாகங்களும் அமைத்து வருகின்றனர்.
  
மேலும், நிர்மல் பாரத் அபியான் திட்டம் என்ற சுகாதார பாரத இயக்கம் சார்பில் கிராமங்களில் தலா ரூ.11 ஆயிரம் முழு மானியத்தில் தனிநபர் கழிப்பறை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், 2015-க்குள் முழு சுகாதார கிராமம்மாக மாற்றுவதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் கடந்தாண்டில் மாவட்ட ஊராக வளர்ச்சி முகமையின் மூலம் கழிப்பறை இல்லாத குடியிருப்புகள் சர்வே எடுத்தனர்.

அதில், இம்மாவட்டத்தில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 449 குடியிருப்புகளில் தனிநபர் கழிப்பறை இல்லாமல் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது. இத்திட்டத்திற்காக ஒவ்வொரு கழிப்பறைக்கும் மானியத் தொகையாக ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் இதுவரையில் 11423 தனிநபர் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், பள்ளிகள், அங்கன்வாடிகளிலும் அமைக்க மும்முரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தற்போது, தனிநபர் கழிப்பறை திட்டத்தில் பொதுமக்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காக பாராசூட் மூலம் பறந்து சென்று கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் வாகனத்தில் மேல்பகுதியில் தனிநபர் கழிப்பறை மாதிரி வளாகம் அமைத்து, அதிலிருந்து கயிறு மூலம் பாராசூட் பொறுத்தி ஒருவர் பறந்து சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் வீசி வழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் பிரபாகர் கூறுகையில், இத்திட்டத்தில் பொதுமக்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்தாய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பாராசூட் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் குறிப்பிட்ட கிராமங்கள் தேர்வு செய்து, அங்கு 10-க்கும் மேற்பட்ட சுற்று பகுதி கிராம மக்களை வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இப்பணியை இந்திய வான்வெளி மற்றும் அறிவியல் மையத்தின் மூலம் பாராசூட்டில் பறக்கும் பயிற்சி பெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, முதல் முறையாக செயல்படுத்துவதால் பொதுமக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவை இந்திய வான்வெளி மற்றும் அறிவியல் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கூறுகையில், வாகனத்தின் மேல் பகுதியில் மாதிரி கழிப்பறை வளாகம் பொறுத்தப்பட்டு, அதில் பாராசூட்டில் பறப்பவரின் பாதுகாப்பு கருதி கயிரால் இணைத்து கட்டப்பட்டிருக்கும். இதுபோல் பாராசூட்டில் பறந்து வரும் புதுமையான விளையாட்டை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்படுகின்றனர். அப்போது அவர்களிடையே துண்டு பிரசுரங்களையும் வழங்கி வழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அப்போது, பொதுமக்கள் பாராசூட்டில் பறக்க ஆசைப்பட்டால் உடனே பறப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதைப்பார்த்து மற்ற மாவட்டங்களிலும் வழிப்புணர்வு பிரசாரம் செய்ய அழைத்துள்ளனர். இதற்கு முன்பு முதல்வர் காப்பீட்டு திட்டம், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வையும் பாராசூட் முலம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.