பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகர் அருகே மகளிர் கூட்டமைப்புகளுக்கு எழுத்தறிவு பயிற்சி தேர்வு 

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சங்கரலிங்காபுரம் கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம் சார்பில் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கான எழுத்தறிவு பயிற்சி தேர்வு முகாம் செவ்வாய்கிழமை  நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:41 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சங்கரலிங்காபுரம் கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம் சார்பில் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கான எழுத்தறிவு பயிற்சி தேர்வு முகாம் செவ்வாய்கிழமை  நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம் சார்பில் ஊராட்சி அளவிலான சிறந்த மகளிர் கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுகிறது. அதில் உறுப்பினர்கள் அனைவரும் எழுத படிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இக்கிராமத்தி்ல் உள்ள மகளிர் கூட்டமைப்புகளி்ல 38 பேர் வரையில் எழுத்தறிவு பெறாதவர்களாக இருந்தனர். இவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக  எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கான எழுத்தறிவு தேர்வு முகாம் அக்கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு ஊராட்சித் தலைவர் சொக்கப்பன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஜெயசங்கரன் முன்னிலை வகித்தார். இதில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமகிருஷ்ணன், களப்பணியாளர் லலிதாதேவி ஆகியோர் பங்கேற்று மகளிர் சுய உறுப்பினர்களுக்கு தேர்வு நடத்தி மதிப்பீடு செய்தனர்.

மேலும், சிறந்த மகளிர் கூட்டமைப்புக்குக்கு என்னென்ன தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கத்தின் உதவி திட்ட அலுவலர் ஜெயகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.