விருதுநகர் அருகே வாகன விபத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் காயம்
விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அன்னராஜ்(42). இதே காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருகிறவர் ஜெயப்பிரகாஷ்(36). இவர்கள் திருட்டு


விருதுநகர் அருகே வாகன விபத்தில் காவல் ஆய்வாளர், போலீஸார் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அன்னராஜ்(42). இதே காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருகிறவர் ஜெயப்பிரகாஷ்(36). இவர்கள் திருட்டு வழக்கில் கைதான 5 கொள்ளையர்களை திங்கள்கிழமை இரவு நீதிபதி வீட்டில் ஆஜார்படுத்துவதற்காக காவல் துறை வாகனத்தில் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் போலீஸ்காரர் ஆகியோர் இருசக்கர வாகனத்திலும் சென்றனர்.
அப்போது, நான்குவழிச்சாலையில் வடமலைக்குறிச்சி அணுகுசாலையில் செல்லும் போது எதிரே சின்னமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி(45) என்பவர் சைக்கிளில் குறுக்கே வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காவல் ஆய்வாளர், போலீஸ்காரர் மற்றும் சைக்களில் சென்றவர் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...