திருச்சி கருமண்டபம் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.எந்திரத்தை புதன்கிழமை நள்ளிரவு கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி கருமண்டபம் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு 1.15 மணிக்கு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பால்ராஜ், தலைமைக் காவலர் ரவிசங்கர்,காவலர் அப்துல்லா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். தேசியக் கல்லூரி அருகே அவர்கள் சென்ற போது அங்குள்ள தனியார் வங்கிக்கு(HDFC)சொந்தமான ஏ.டி.எம் மையத்தின் கதவு கீழே இறக்கிவிட்ட நிலையில்,உள்ளே இருந்து சப்தம் வந்ததை அறிந்த அவர்கள், ஏ.டி.எம் மையத்தில் உள்ளே நுழைந்து பார்த்த போது அங்கு ஒரு நபர் கடப்பாறையால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்ராஜ், இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் கருமண்டபம் அருகேயுள்ள திருநகர், 1-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த காசிநாதன் மகன் சிவா (எ) சிவசுப்பிரமணியன் (39) என்பதும், இவர்,கோயமுத்தூர், பாப்பநாயகன் பாளையத்தில் டிபன் கடை நடத்தி வந்த போது அங்கு முத்துக்குமார் உதவியுடன் ராஜமாணிக்கம் என்பவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி என்பதும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிணையில் வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிவசுப்பிரமணியனை போலீஸார் கைது செய்தனர்.
சிவசுப்பிரமணியனை பிடித்த ரோந்து பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாவுல்ராஜ், தலைமைக் காவலர் ரவிக்குமார், காவலர் அப்துல்லா ஆகியோரை மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் பாரட்டி அவர்களுக்கு வெகுமதி வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

